[ பி.பி.சி ]
கொரிய தலைநகரான ஸோலுக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 40 மைல் தூரத்தில் ஓசோன் என்னும் நகரத்தில் பணியாற்றுகின்ற இலங்கையின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முஹமட் பௌஸ் என்னும் அந்த இளைஞர் அங்கிருக்கும் இலங்கையர்கள் எல்லாம் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகக் கூறினார்.
தமக்கு தமது நிறுவனத்தினால், தங்குவதற்கான வசதிகள் எல்லாம் உரிய வகையில் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், வடகொரியாவால் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால், ஒளிவதற்காக பதுங்கு குழி வசதிகளோ அல்லது சுரங்க அறை வசதிகளோ தமக்கு செய்து தரப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவில் ஏவுகணைகளை ஏற்றிய வாகனங்கள் அங்குமிங்கும் நடமாடுவதாகவும், நகருக்கு மேலாகச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாகவும் அவ்விளைஞன் தெரிவித்துள்ளதுடன், இவற்றால் அங்குள்ள இலங்கையர்கள் அனைவரின் அச்சம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையே மோதல் ஏற்படும் பட்சத்தில் தம்மை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுவதாக ஊடகங்களினூடாக தாம் அறிந்து கொண்டதாகவும், ஆனால் எவ்வாறு அவற்றை செய்யப்போகிறார்கள் என்பது குறித்து தமக்கு எந்த விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.
எது எப்படி இருந்தாலும் தென்கொரிய மக்கள் இந்தப் பதற்றங்கள் எதுவும் இன்றி சாதாரணமாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் இருபத்தையாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை இலங்கையர்கள் அங்கு வேலை செய்வதாகக் கூறும் அவர், அனைவரும் இவ்வாறே பயத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்ற நிலைமை குறித்து இலங்கையர்கள் அச்சமடையத் தேவையில்லை
கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்ற நிலைமை குறித்து இலங்கையர்கள் அச்சமடையத் தேவையில்லை என தென் கொரியா அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் இலங்கைப் பணியாளர்கள் கடயைமாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வட கொரியா சில காலமாகவே எச்சரிக்கை விடுத்து வருவதாகவும், இது குறித்து அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் ஜொன்கமுன் சொய் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக விடுக்;கப்பட்டு வரும் இந்த அச்சுறுத்தல்கள் வழமையானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திடீரென யுத்தம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரியாவில் 250000த்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பணியாற்றி வருவதாகவும் இதில் 25000 பேர் இலங்கையர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten