தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 april 2013

வாயிலே சிகரெட், கையிலே வத்திப்பெட்டி! ஒரே ஜோரு !




தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்த நிலையிலும், அடாது மழை பெய்தாலும், விடாது பயணம் நடக்கும் என்று இலங்கை சென்ற எம்.பி.க்கள் குழு, அங்கே என்ன செய்கிறது ? படத்தை பார்த்தாலே புரியவில்லையா ? இந்தியாவில் இருந்து ஏதோ விடுதலை கிடைத்ததுபோல யாழில் இவர்கள் அடிக்கும் லூட்டியே தனி. வாயில் சிகரெட் கையில் வத்திபெட்டியோடு இவர்கள் அலைவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இலங்கை வடபகுதியில் தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் மக்களின் குறைகளை கேட்காது, ஏதோ சுற்றலா வந்துள்ளது போல் ஹாயாக நடந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மகேந்திரபுரம் கிராமத்துக்கு வந்து இறங்கியது எம்.பி.க்கள் குழு. இந்தக் கிராமத்தில் இந்திய நிதியுதவியுடன் கூடிய வீட்டு திட்டத்தின் கீழ் அமைத்து கொடுக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். அப்போது, அவர்களுக்கு ஒரே ஜாலி மூடு வந்துவிட்டதாம். இவர்கள் தங்களுக்குள் தாங்களே போட்டோ எடுத்துக் கொண்டனர். மக்கள் தமக்கு அணிவித்த மாலைகளை கழட்டி தங்களுக்குள் மாறி மாறி அணிவித்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். ஒருவர், தமக்கு போடப்பட்ட மாலையை கழட்டி தம்முடன் வந்த சக பெண் எம்.பி.க்கு அணிவித்து மகிழ்ந்தார்.

அக்குழுவில் அங்கம் வகித்த ஒருவர் வாயில் சிகரெட் புகைந்தபடியே வீடுகளை சுற்றி பார்த்தார். ​இவர்களின் இந்த செயல்பாட்டை அங்கிருந்த மக்கள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இலங்கையில் பொது இடங்களில் புகை பிடித்தல் தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. தூதுக்குழு என்பதால், போலீஸ் பிடிக்கவில்லை!



Geen opmerkingen:

Een reactie posten