மிக மிக அதிசயமான குழந்தை !
வட இந்தியாவில் வசித்துவரும் அப்துல் ரகுமான் என்னும் 26 வயதுடைய தந்தைக்கு பிறந்த குழந்தையின் நிலை இதுதான். 18 மாதங்களே ஆகும் ரூனா என்னும் இச் சிறுமியின் தலை சுமார் 3 மடங்கு பெரிதாக உள்ளது. சாதாரணமாக இந்த வியாதி எச்சிறுவர்களுக்கும் வருவது இல்லை. கோடியில் ஒருவருக்கே இவ்வாறு வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக தலைக்குள் நீர் அதிகரிப்பதால் இதுவருவதாக கூறப்படுகிறது. மருத்துவர்களால் தலைக்குள் இருக்கும் நீரை உறுஞ்சி எடுக்க முடிம். இருப்பினும் அவ்வாறு செய்ய பெரும் பொருட்செலவு ஏற்படும் என்று கூறப்படுவதால், அவளது தந்தையால் அதனைச் செய்யமுடியவில்லை.
சாதாரண கூலித் தொழிலாளியாக இருக்கும் தந்தையால், இச் சிறுமிக்கு சிகிச்சை கொடுக்க முடியவில்லை. இன் நிலை நீடித்தால் இச் சிறுமி கொஞ்சம் கொஞ்சமாக மூளைத் திறனை இழந்து பின்னர் மரணமடைவார் என்று கூறப்படுகிறது. எனவே இச் சிறுமிக்கு உதவுமாறு பிரித்தானியப் பத்திரிகை ஒன்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனையடுத்து பலர் இச் சிறுமிக்கு உதவ முன்வந்துள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4860
Geen opmerkingen:
Een reactie posten