இக் கடிதத்தில் தேசிய தலைவர் கூறியதாக சில செய்திகள் எழுதப்பட்டிருந்தது. அதில்... தான் ஜெயா TV ஐ பார்த்ததாக தேசிய தலைவர் கூறியது போல எழுதப்பட்டிருந்தது. இக் கடிதத்தில் சந்தேகம் இருப்பதாக அதிர்வு இணையம் முன்னர் செய்தி வெளியிட்டது. அதாவது 2009ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் புலிகள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் மிகக் கடுமையாக போராடிக்கொண்டு இருந்தார்கள். மக்கள் கொத்துக்கொத்தாக இறந்துகொண்டு இருந்தார்கள். தாக்குதல் யுக்திகளை தேசிய தலைவர் அவர்கள் நேரடியாக வழிநடத்தினார். இன் நிலையில் சங்கதி இணையம் கூறுவது போல அவர் ஜெயா TV பார்த்துகொண்டு இருந்திருக்க மாட்டார். இவ்வாறு அக் கடிதம் உண்மையானது என சங்கதி24 என்னும் இணையத்தளம் எழுதி , தேசிய தலைவரை மிகக் கேவலமாக கொச்சைப்படுத்தி உள்ளது. இவ்வாறு ஒரு செய்தியை அவர்கள் எழுதும்பொது மக்கள் என்ன நினைப்பார்கள் ? முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் இறக்கும்போது தேசிய தலைவர் அவர்கள் ஜெயா TV இல் சேலம் மாநாட்டை பார்த்துக்கொண்டு இருந்தாரா ? என்று நினைக்க மாட்டார்களா ?
இவ்வாறு மறைமுகமாக தேசிய தலைவர் மீதும், புலிகள் அமைப்பு மீதும் சங்கதி 24 என்னும் இணையம் படு மோசமான சேறடிப்பை ஆரம்பித்துள்ளது. தேசிய இணையம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு இவ்விணையமானது மறைமுகமாக சேற்றை வாரி இறைக்கும் நடவடிக்கையில் கீழ் தரமாக இறங்கியுள்ளது. தனி ஒரு மனிதனால் நடத்தப்படும் இவ்விணையத்தளம் வெளியிட்டுள்ள இச் செய்தியானது அப்பட்டமான பொய் ! புலிகளின் கடற்படைத் தளபதி சூசை அவர்கள் வீரச்சாவடைந்து விட்டார். அப்படி அவர் உயிருடன் இருக்கிறார் என்று சங்கதி 24 இணையம் எழுதினால், அது அவரைக் காட்டிக்கொடுக்கும் செயலாகத் தான் இருக்கும். அத்துடன் அவர் உயிருடன் இருப்பின் ஏன் அவரிடம் இருந்து ஒரு நேர்காணலை எடுத்து இவர்களால் போட முடியாது ? மக்களுக்கு உண்மை நிலை தெரியவேண்டும். நாம் இதுகுறித்து செய்தி வெளியிட்ட காரணத்தால், குறிப்பிட்ட இவ்விணையம் எம்மை துரோகி என்றும் சொல்லுவார்கள். இக் குழுமத்தில் இருப்பவர்கள் அதிர்வு இணையம் மீது சேறு பூசும் நடவடிக்கையிலும் இறங்குவார்கள். எத்தனை இடர் வரினும் அதிர்வு இணையமானது உண்மைச் செய்திகளை வெளியிடும்.
நாம் எவருக்கும் அஞ்சப்போவது இல்லை.
அதிர்வின் ஆசிரியபீடம்:
Geen opmerkingen:
Een reactie posten