ஹலால் சான்றிதழை ரத்துச் செய்து விட்டு, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்ட முயற்சியை பாராட்டுகிறேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனினும் அமைச்சொன்றின் செயலாளர் கூறியதால் மாத்திரம் அந்த போராட்டத்தில் இருந்து, அந்த அமைப்பு விலகி கொண்டதானது இலங்கையின் பௌத்த மக்களை கவனத்தில் கொள்ளாது மேற்கொண்ட காட்டிக்கொடுப்பு என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டுஉரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஹலால் முற்றாகநீக்கி கொள்ளும் வரை அதற்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்க முடியும்.
இலங்கையின் பெருபான்மை பௌத்த மக்களுக்கானஹலால் உணவை சந்தையில் இருந்து முற்றாக நீக்கும் வரை பொதுபல சேனா குரல் கொடுத்து அதற்காக பொதுபல சேனாபோராடியிருக்க வேண்டும்.
செயலாளர் ஒருவர் கூறியதும் அந்த போராட்டத்தை குறித்த பௌத்த அமைப்பு நிறுத்தி கொண்டமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அதேவேளை தான் சிறந்த பௌத்தன் என்பதால், ஏனைய மதங்களை மதித்து வருவதாகவும் எனினும் சிறுபான்மையினர் பெருபான்மையினத்தை ஆக்கிரமிக்கும் தந்திரமானசெயற்பாடுகளுக்கு இடமளிக்க போவதில்லை எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten