தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 april 2013

தென்னிந்திய- இலங்கை நடிகர்களின் செயற்பாடுகள் அர்த்தமற்றவை: ஜே.வி.பி குற்றச்சாட்டு!


இந்தியர்கள் போல இலங்கையர்கள் தரம் தாழ்ந்து போக மாட்டார்கள்: சம்பிக்க ரணவக்க
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 02:18.01 AM GMT ]
இந்தியாவுக்கு சென்ற பயணிகள், பிக்குகள், கலைஞர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமாக நடத்தப்பட்டமைக்கு பதிலாக அங்கிருந்து இங்கு வருபவர்கள் நடத்தப்படமாட்டார்கள். மேலும் இலங்கையர்கள் அவர்களைப் போல தரம் தாழ்ந்து போகமாட்டார்கள். என்று அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலருமான சம்பிக் ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
பத்தரமுல்லவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் தீவிரவாதத்தை ஊக்குவித்ததற்கு இந்தியாவே பொறுப்பு
1984ற்கும் 90ற்கும் இடைப்பட்ட காலத்தில் பயிற்சி கொடுத்து, ஆயுதங்களை கொடுத்து, அடைக்கலம் கொடுத்து இந்தியாவே இலங்கையில் தீவிரவாதத்தை ஊக்குவித்தது.
சிறிய குழுவாக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு இராணுவமாக வளர்த்து விட்டது இந்தியா தான்.
இலங்கை அதிபர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமானதே.
வர்த்தக நோக்கிற்காகவோ, யாத்திரையாகவோ இந்தியா செல்லும் இலங்கையர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்ற பயணிகள், பிக்குகள், கலைஞர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமாக நடத்தப்பட்டமைக்கு பதிலாக அங்கிருந்து இங்கு வருபவர்கள் நடத்தப்படமாட்டார்கள்.
மேலும் இலங்கையர்கள் அவர்களைப் போல தரம் தாழ்ந்து போகமாட்டார்கள்.
இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக்குழு வெள்ளவத்தை மரைன் ட்ரைவ், புறக்கோட்டைக்குச் சென்று பார்த்தால், தமிழர்கள் இந்த நாட்டில் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று தெரியும்.
இலங்கையில் தீவிரவாதத்தை ஊக்குவித்ததில் இந்தியாவின் பங்கு குறித்து முழுமையான விசாரணையை நடத்துவது குறித்து அனைத்துலக சமூகம் ஆராயவேண்டும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய- இலங்கை நடிகர்களின் செயற்பாடுகள் அர்த்தமற்றவை: ஜே.வி.பி குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 03:37.02 AM GMT ]
தென்னிந்திய நடிகர்களும் இலங்கை நடிகர்களும் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அர்த்தமற்றது என்று ஜே.வி.பி குற்றம்சுமத்தியுள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
செயற்படுத்த வேண்டிய விடயங்களை கைவிட்டு ஒரு நாடு என்ற வகையில் தேவையற்ற  விடயங்களில் அவர்கள் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசியல் சார்ந்த விடயங்களில் கலைஞர்கள் தலையிடுவது மக்கள் சமூகத்தினரிடையே குரோதத்தை தோற்றுவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், தமது அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை மோதல்கள் இன்றி மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கையின் நடிகர்களில் ஒருவதாக ரவீந்திர ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கைக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ளும் தென்னிந்திய நடிகர்களின் திரைப்படங்களை திரையிடுவதை நிறுத்திவிட்டு கேரள திரைப்படங்களை வெளியிடுவதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று ராவணா பலய அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பான மகஜர் ஒன்று நேற்று தேசிய திரைப்பட கூட்டுத்தாபன தலைவரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும், தமது இயக்கம் இந்த கருத்தை ஆட்சேபிப்பதாக இலங்கை கலைஞர்களின் தேசிய இயக்கத்தின் தலைவர் மாலினி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் சிகரெட், வாழைப்பழம் என அநாகரீகமாக நடந்து கொண்ட இந்திய எம்.பிக்கள் குழுவினர்
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 03:45.45 AM GMT ]
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், பொது இடங்களில் சிகரெட்டுடன் அநாகரீகமாக நடந்து கொண்டது பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இக்குழுவினர் கலந்து கொண்ட நிகழ்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையில் சிகரெட்டுடன் வலம் வந்தனர். அதேபோல் சிலர் ஒவ்வொரு இடங்களிலும் நின்று புகைப்படங்கள் எடுப்பதில் மட்டும் ஆர்வங் கொண்டிருந்தனர்.
இன்னமும் சில உறுப்பினர்கள் யாழ்ப்பாண கதலி வாழைப்பழம் சுவையாக உள்ளதாகத் தெரிவித்து, கும்பங்களில் வைத்திருந்த வாழைப்பழங்களையும் தேடித் தேடி உண்டனர்.
இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் மிகவும் கவலைக்குரியதாக மாறியன.
தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த இக்குழுவினர், ஒரு நகைச்சுவைக் குழுவினர் போல செயற்பட்டது மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten