[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 02:00.00 AM GMT ]
தமிழக மீனவர்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் பாரபட்சமாக செயற்படுவதாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கை தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் அசமந்தமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள், அவர்களது மக்களை முட்டாளாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள் என்று இலங்கையின் சிங்கள முன்னாள் கிரிக்கெட் வீரரான அர்ஜூன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இரண்டு கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கு தொடர்பில் இரண்டு இத்தாலியின் கடற்படை வீரர்கள் தொடர்பில் இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள் குறித்து ஏன் இந்தியா மௌனமாக இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் மக்களை முட்டாளாக்குகிறார்கள்!- அர்ஜூன ரணதுங்க!
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 03:08.15 AM GMT ]
இது குறித்து என்டிடிவி ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியிரப்பதாவது:
அரசியலும், விளையாட்டும் தனித் தனியாக வைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை.
அரசியலும், விளையாட்டும் பிரிக்க முடியாததாகி விட்டது. கடந்த பல வருடங்களாகவே இப்படித்தான் இருக்கிறது.
ஆனால் இந்தியாவில் பொதுத் தேர்தல் நெருங்கும் போதெல்லாம் இதுபோல நடப்பது வாடிக்கையாகி விட்டது.
தமிழக அரசியல் தலைவர்கள் இப்படித்தான் செயல்படுகிறார்கள்.
மக்களை முட்ட்டாள்களாக்கி முடிந்தவரை ஆதாயம் தேட முனைகிறார்கள்.
தங்களது அரசியல் லாபத்திற்காக விளையாட்டில் அரசியலை புகுத்தக் கூடாது.
ஆனால் தென்னிந்தியாவில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்றார் ரணதுங்க.
Geen opmerkingen:
Een reactie posten