சவூதி அரேபியாவின் தமாம் நகரில் அமைந்துள்ள தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாத்தாண்டியா, பண்டாரநாயக்கபுரயைச் சேர்ந்த அழகக்கோன் முதியன்சலாகே ரஞ்சித் குமார (25 வயது) என்ற இளைஞரே சுகவீனம் காரணமாக உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் சவூதியின் ரியாத் நகருக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சவூதி அரேபிய குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாமில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten