தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 april 2013

என் உயிர் பிரிந்தால் உடலுக்கு புலிக்கொடி போர்த்துங்கள்: இயக்குநர் மணிவண்ணன்


வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றமில்லை! தேர்தல் ஆணையாளர்
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 06:21.24 AM GMT ]
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில்; மாற்றமில்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாத காரணத்தினால் பாராளுமன்ற பிரதிநிதகளின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், வன்னி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களுக்கான பிரதித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
2012ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 219196 வாக்காளர்கள் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, பிரதி தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் அதிகாரம் பிரதித் தேர்தல் ஆணையாளருக்கு கிடையாது எனவும், இது குறித்த ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிவு வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பதுளை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைத்து நுவரெலியா மாவட்டத்திற்கு அதனை சேர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

என் உயிர் பிரிந்தால் உடலுக்கு புலிக்கொடி போர்த்துங்கள்: இயக்குநர் மணிவண்ணன்
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 06:30.11 AM GMT ]
என்னிடம் எதுவும் இல்லை. உயிர்மட்டும்தான் உள்ளது. அதை எம் அரசியல் வாதிகள் எடுத்தால் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என்று தம்பி சீமானுக்கு சொல்லி வைத்திருக்கிறேன். இவ்வாறு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அவரது இயக்கத்தில் அமைதிப்படை இரண்டாம் பாகம் படம் தயாராகிறது. அதன் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமைதிப் படை 2ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். உண்மைதான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.
 படத்தைப் பார்த்துவிட்டு தமது இயலாமையை வெளிப்படுத்த என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten