தமிழகத்தின், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இடம்பெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர், இலங்கை இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 54 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை இராணுவத்தை கண்டிப்பது, தனி ஈழம் அமைய எதிர்ப்பு தெரிவிக்கும் ராஜபக்சவை கடுமையாக கண்டிப்பது, தமிழ் இனத்தின் தொப்புள் கொடி உறவுகள் அழிவதை கண்டுகொள்ளாத இந்திய அரசைக் கண்டிப்பது, கச்சதீவை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளர்.
கேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்ட இந்திய மத்திய அரசு, 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்காததற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ச உருவ பொம்மையை எரித்தனர்.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தால் சென்னை நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten