தெய்வ உருவத்தை அச்சிட்ட ஆண், பெண் உள்ளாடைகளை மஹரகம நகரில் இரகசியமாக விற்பனை செய்து வந்த நபரொருவரை கொழும்பு மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞர் பாணந்துறையைச் சேர்ந்தவராவார்.
இவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது மஹரகம நகரைச் சேர்ந்த மற்றொரு வியாபாரியிடமிருந்து இந்த ஆடைகளைக் கொள்வனவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இத் தகவலை அடுத்து பொலிஸார் அந்த வியாபாரியைக் கைது செய்து அவரிடமிருந்த புத்த உருவம் அச்சிடப்பட்ட ஆண், பெண் உள்ளாடைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த இருவரையும் மஹரகம பொலிஸார் மஹரகம மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten