தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 april 2013

இந்தியாவின் நாடாளுமன்றக்குழு இன்று இலங்கை வருகிறது (செய்தித்துளிகள்) !!


இந்தியாவின் விசேட நாடாளுமன்றக் குழு இன்றைய தினம் இலங்கை வருகிறது. இந்திய வர்த்தக சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் இந்த குழு இலங்கை வருகிறது
இன்று தமது விஜயத்தை ஆரம்பிக்கும் இந்திய நாடாளுமன்றக் குழு, கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தங்கி இருந்து பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்ளும்என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வடமாகாணத்தில் இந்தியாவின் அனுசரணையில் நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளது.
இந்திய வீட்டுத்திட்டம் வெற்றியளித்துள்ளது - இந்திய வெளியுறவு அமைச்சு
இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயணாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிடும் திட்டம் வெற்றியளித்துள்ளதாக இந்திய வெளியுறவுகள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்காக கடந்த ஆறுமாதங்களில் 15500 பயணாளிகளுக்காக 100 கோடி இந்திய ரூபாய்கள் வைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten