தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 april 2013

தமிழக எதிர்ப்பிற்கு அதிருப்தி வெளியிட்டு இலங்கை நடிக நடிகையர் அதிஸ்டான பூஜை!


இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீளவும் நாட்டுக்கு அழைத்துக்கொள்ள நடவடிக்கை
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 01:39.33 AM GMT ]
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீளவும் நாட்டுக்கு அழைத்துக்கொள்ள நவடடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதியில் சகல இலங்கை அகதிகளையும் மீள அழைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் இணக்கம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 5304 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்.
தென் இந்தியாவில் தற்போது 68000 இலங்கை அகதிகள் அகதி முகாம்களிலும் வேறும் இடங்களிலும் தங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் இரண்டாண்டுகளுக்குள் மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை அகதிகளை மீள அழைத்துக் கொள்வது தொடர்பில் ஒர் பொறிமுறைமையை உருவாக்க வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு இலவச கடவுச் சீட்டுக்களும், பிறப்புச் சான்றிதழ்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


தமிழக எதிர்ப்பிற்கு அதிருப்தி வெளியிட்டு இலங்கை நடிக நடிகையர் அதிஸ்டான பூஜை
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 01:43.08 AM GMT ]
தமிழக எதிர்ப்பிற்கு அதிருப்தி வெளியிட்டு இலங்கை நடிக நடிகையர் அதிஸ்டான பூஜைகளை நடாத்தவுள்ளனர்.
அண்மையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இந்திய நடிக நடிகையர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டுக்கு எதிராக போலிப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை நடிக நடிகையர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எதிர்வரும் 11ம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடிக நடிகையரும், விளையாட்டு வீரர்களும் கூட்டாக இணைந்து இந்தப் போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.
குறித்த தினத்தில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக படப்பிடிப்புக்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
11ம் திகதி மாலை 4.30 மணிக்கு வெள்ளை ஆடை அணிந்து அனைத்து கலைஞர்களும் இந்தப் பூஜையில் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது.


தமிழக போராட்டங்களால் சுற்றுலா முகவர்கள் பாதிப்பு
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 01:46.20 AM GMT ]
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் நடத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களால், இலங்கையின் சுற்றுலா முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதக் காலப்பகுதியில் சென்னைக்கான எந்த ஒரு பயண திட்டங்களையும் விநியோகிக்க முடியாமல் போய் இருந்ததாக சுற்றுலா முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வழமையாக எந்த வருடத்திலும் ஏப்ரல் மாதம் தமிழகத்துக்கு விஜயம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
எனினும் இந்த முறை அந்த எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை நீடிக்குமாக இருந்தால், தமிழகத்திற்கான சுற்றுலாத் துறையை நம்பியுள்ள முகவர்கள் தங்களின் தொழில்களை இழக்க நேரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten