தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 april 2013

பிரித்தானியாவில் பணியாற்றும் இலங்கை சிங்கள வைத்தியர் பணி நீக்கம்!


பிரிட்டனிலுள்ள “லீட்ஸ் ஜெனரல் இன் போமரி“ என்ற தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள வைத்தியர் ஒருவரை அந்த வைத்தியசாலையின் நிர்வாகம் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது.
பிரித்தானிய பத்திரிகை ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிடுகையில்,
இந்த வைத்தியசாலையில் கடமை புரியும் இலங்கையைச் சேர்ந்த வைத்தியரான நிஹால் வீரசேன என்பவர் சத்திர சிகிச்சைப் பிரவிலேயே பணி புரிகின்றனர்.
இவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த சத்திர சிகிச்சைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதன் பலனாக மரணங்கள் அதிகரித்துள்ளன.
இதனை அடிப்படையாக வைத்தே இவர்களைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ய வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
குறித்த வைத்தியர் இந்த வைத்தியசாலையில் 10 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களால் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு மரணமடைந்தவர்களின் உறவினர்கள் இந்த வைத்தியர்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர் என்றும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten