தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 april 2013

அவுஸ்திரேலிய இலங்கை வர்த்தகரை கடத்திய நால்வர் இந்தியாவில் கைது !


அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை வர்த்தகர் ஒருவரை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கையர் நால்வரை இந்திய பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவே இவர்களை கைதுசெய்துள்ளது எனவும் கூறப்படுகிறது. நால்வர் அடங்கிய குழு ஒன்று மேற்படி, இந்த இலங்கை வர்த்தகரை இந்தியாவுக்கு வருமாறு தந்திரமாக அழைத்துள்ளார்கள். இவர் கடந்தமாதம் இந்தியா சென்றவேளை அங்குவைத்து கடத்தப்பட்டுள்ளார். 

அவுஸ்திரேலிய வர்த்தகரை கடத்திய நால்வரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஏனைய நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி 2.5 கோடி ரூபாவை இந்தியாவில் சேகரித்துள்ள விபரமும் தெரியவந்துள்ளது. சேலையூரை சேர்ந்த ஜெயன் மௌலான (வயது 40), மன்னடியை சேர்ந்த மொஹமட் பஸ்மி (வயது 30), வேங்கம்பக்கத்தை சேர்ந்த துவன் கபிர் (வயது 37), மொஹமட் ராஜ்மன் (வயது 23) ஆகியோரே கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடைய நபர்கள் என்று தமிழகப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இக் கடத்தல் சம்பவமானது இவர்களுக்கு இடையே உள்ள , கொடுக்கல் வாங்கல் பிரச்சனையின் எதிரொலியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேற்படி விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.


Geen opmerkingen:

Een reactie posten