1984ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இருந்தபோது நானே என் காரை தனியாக ஓட்டிச் சென்று அவரைச் சந்தித்தேன். ஆன்டன் பாலசிங்கம், மற்றும் வேறு சிலர் அங்கே இருந்தனர்.
அப்போது நான் பிரபாகரனிடம், “இந்திய அரசோடு ஒத்துழையுங்கள். இலங்கையில் தமிழ் மாநிலம் அமையும். அதன் முதல்வராக நீங்கள் இருப்பீர்கள்” என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை என்று கூறினார் சிதம்பரம். அப்படி என்றால் அன்றே இந்திய மத்திய அரசு தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்பதும், ஒரு மாநில சுயாட்சியை முன்வைக்கவே விரும்பியது என்பதும் தெளிவாகியுள்ளது. அத்தோடு தேசியதலைவர் எவருக்கும் விலைபோக மாட்டார் என்பதனையும் ப.சிதம்பரத்தின் பேச்சு மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது?????
Geen opmerkingen:
Een reactie posten