நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவா பிரச்சினையை மறைப்பதற்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இனவாத அமைப்பே இந்த பொதுபல சேனா என்ற அமைப்பு. இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உண்டு.
1915ம் ஆண்டுகளில் இலங்கையில் வாழ்ந்த சக்திவாய்ந்த இனமாக முஸ்லிம், தமிழ் இனங்கள் காணப்படுகின்றன. எனவே இந்த நாட்டை யாரும் சொந்தமாக்கி விட முடியாது. இவ்வாறிருக்க பொதுபல சேனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த இனவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
முஸ்லிம்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எதிராக பௌத்த பிக்குகள் செயற்பட கூடாது. மாறாக குடும்ப ஆட்சி புரியும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராடுவதே சிறப்பானதாக இருக்கும். அதனைவிடுத்த பௌத்த பிக்குகள் தேவையில்லா விடயங்களில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten