தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 april 2013

இந்திய எம்.பி.க்கள் குழுவின் இலங்கை பயணம் ரத்து?


தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பால் இந்திய எம்.பி.க்கள் குழுவின் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையுடன் அரசியல், வர்த்தகம், தொழில் உறவு குறித்து பேச 7 பேர் கொண்ட இந்திய எம்.பி.க்கள் குழு இன்று முதல் வரும் 12ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய இருந்தது.
இந்த குழுவில் பா.ஜ.க.வை சேர்ந்த பிரகாஷ் ஜவடேகர், காங்கிரசை சேர்ந்த சந்தீப் தீட்ஷித் உள்பட 7 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த பயணத்துக்கு இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில், இந்திய எம்.பி.க்கள் குழுவின் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பால் இந்திய எம்.பி.க்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை மத்திய மந்திரி ஜெயந்தி நடராசனும் நேற்றைய தினம் இலங்கை பயணத்தை ரத்துச் செய்யுமாறு வர்த்தக கூட்டமைப்புக்கு கடிதம் அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten