கண்ணிவெடிகள் தொடர்பான சர்வதேச விழிப்புணர்வு தினம் கடந்த வாரம் கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டபோது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போர் இடம்பெற்ற பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் சதுர கிலோ மிற்றர் தூரத்துக்கு மதிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டன.
இந்த மதிவெடிகளை அகற்றுவதில் பெரும் சவால்கள் எதிர்நோக்கப்பட்டன. எனினும் அரசாங்கம் இந்த வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பில் அதிக அக்கறை செலுத்தியது. போர் நிறைவுக்கு வந்த பின்னர் உடனடியாகவே இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பல்வேறு சர்வதேச அமைப்புக்களும் இந்தப் பணிக்கு தங்களது உதவிகளை வழங்கின. டெனிஸ் மிதிவெடியகற்றும் பிரிவு, இந்தியாவின் சர்வத்திரா மிதிவெடியாகற்றும் பிரிவு,பிரித்தானியாவின் வெடிபொருட்கள் அகற்றல் தொடர்பான ஆலோசனைப் பிரிவு, அவுஸ்திரேலிய அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் உடனடியாக வெடிபொருட்களை அகற்றும் பணிக்கு உதவ முன்வந்தன.
இலங்கை இராணுவத்தினரும் தமக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மதிவெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மே 2009ம் ஆண்டு முதல் மார்ச் 2013ம் ஆண்டு காலப்பகுதி வரை சுமார் 4 ஆயிரத்து தொள்ளாயிரத்து 92 சாதாரண மதிவெடிகளை படையினர் மீட்டுள்ளனர்.
சுமார் 240 டாங்கி எதிர்ப்பு மதிவெடிகள் இக்காலப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை விட சுமார் 39 ஆயிரத்து 29 வெடிக்காத வெடிபொருட்களும் இக்காலப்பகுதியில் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
மிதிவெடியகற்றும் பணிகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 20 மில்லியன் அமெரிக்க மொலர் (2.6 பில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கியுள்ளது.
2020ம் ஆண்டு மிதிவெடியற்ற இலங்கை என்ற அரசின் திட்டத்துக்கு அமைவான இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலியா தூதுவர் ரொபின் முடி மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்பி தங்கள் வாழ்க்கையை மீளமைத்துக் கொள்ளும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அவுஸ்திரேலியா மிதிவெடிககற்றில் பணிகளுக்கு உதவி வருவதாகத் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் 74 சதுர கிலோ மீற்ரருக்கு மேற்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு முதல் போரினால் பாதிக்கப்பட்ட வெடிபொருட்கள் அகற்றப்பட்ட மொத்த வேலைத்திட்டத்தில் இது 15 வீதமாகும் எனவும் அவுஸ்திரேலியத் தூதுவர் மேலும் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten