பட்டிப்பளை கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த 31ம் திகதி கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மண் கமழும் மங்கள விழாவின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் பொருளாதாரம் தொடர்ச்சியாக அழிவடைந்து வந்த நிலையில், தற்போதும் அது தொடர்கின்றது.தற்போது யுத்தம் நடைபெறாவிட்டாலும் வேறொரு விதத்தில் எமது பொருளாதாரம் சிதைக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் வறுமையிலும் மதுபான விற்பனையிலும் முதலிடத்தில் உள்ளதைக் காணலாம்.
இலங்கையிலே அதிகளவான மதுபானசாலைகளை கொண்டுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு திகழ்வதனால் நாளொன்றிக்கு 85000 மதுபான போத்தல்கள் இங்கு விற்பனையாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே சமுதாய சீரழிவுகளில் இருந்து எம்மை நாம் பாதுகாக்க வேண்டும் இல்லையேல் எதிர்காலத்தில் எமது இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகி விடும்.
இந்த வகையில் பட்டிப்பளை கலை, இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் சேவை பாராட்டுதலுக்குரியதாகும் கடந்த மூன்று நாட்களாக மண்கமழும் மங்கள விழா எனும் கலாசார நிகழ்வினை இந்த ஒன்றியம் மிகவும் சிறப்பாக நடாத்தியிருக்கின்றது.
எமது பாரம்பரிய கலை இலக்கியங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டிருக்கின்றது ஒரு இனத்தின் வரலாறு என்பது அதனுடைய கலை கலாசார விழுமியங்களைப் பொறுத்தே அளவிடப்படுகின்றது.
அத்துடன் இந்த கலாசார நிகழ்வுகள் மின்னியல் அடிப்படையில் கணினி மயப்படுத்தப்படுவதால் காலத்தால் அழியாத ஒரு ஆவணமாக பேணப்படுவதற்கும் இந்த நிகழ்வுகள் உதவுகின்றன இதற்கு ஊடகத்துறைகளும் முக்கிய பங்காற்றுவதைக் காணலாம் என அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten