அவைசார்ந்த முழுமையான விபரங்களையும் தயாரித்து அங்கீகரித்து குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பிவைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அண்மையில் ஜனாதிபதியின் யாழ்.வருகையை ஒட்டி தழிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆளணி சம்மந்தமான கேள்விகள் எதனையும் எழுப்பாத வகையில் எவ்விதமான தகவல்களும் பிரமாணக் குறிப்புக்களுமற்ற சுற்றறிக்கை ஒன்றினை உள்ளூராட்சி அமைச்சின் வடக்கு மாகாண செயலாளர் அனுப்பி வைத்தார்.
இச் சுற்றிக்கை ஆளணி நியமனங்களை மேற்கொள்வதற்கல்ல. சில இடர்பாடுகளை சமாளிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட ஒன்று என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
இச்சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நல்லூர் பிரதேசசபைச் செயலாளரின் கொடியேற்றத்துடன் சில பிரதேச சபைகள் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு விளம்பரங்களை பத்திரிகையில் பிரசுரித்து திருவிழாக்களை கொண்டாடியது.
சில சபைகள் இன்று வரை குறித்த விழாவில் பங்கு கொள்ளவில்லை. நியமன அதிகாரம், தகைமைகள், சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் சம்மந்தமாக தமது அதிருப்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு மாகாண ஊழியர் நலன்புரிச்சங்கமும் சில பிரதேச சபைத் தலைவர்களும் வெளியிட்டனர்.
இது தொடர்பான கடிதங்களும் அனுப்பியிருந்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த விதமான காத்திரமான பதிலும் கிடைக்கவில்லை. பத்திரிகையில் விளம்பரப்படுத்தி பெறப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த பிரதேசபைகளில் சேமிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகைமைகள் மீள் பரிசீலனை செய்யப்படுகின்றன என்ற கடிதம் பெப்ரவரி மாதத்தில் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உள்ளூராட்சி அமைச்சின் வடக்கு மாகாண செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதால் குறித்த நியமனங்கள் வழங்கமுடியாமற் போய்விடும். எனவே சேவைப் பிரமாணக் குறிப்பை வெளியிடுவதில் மாகாணசபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச சபைகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல வருடங்களாக தற்காலிக, அமைய, வெளிவாரி அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் கடைமையாற்றுபவர்களின் நிலையும் தொடர்ச்சியாக அவ்வாறேதான் உள்ளது. வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களின் நிலையும் பரிதாபகரமான தொன்றாகவுள்ளது.
இவைதொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் இடர்களும் நீண்ட வண்ணமுள்ளன. மாகாணசபைத் தோர்தலையொட்டி அமைச்சரின் நியமன அறிவுப்புக்காக மாகாணசபை அதிகாரிகள் காத்திருப்பது போல் எண்ணத் தோன்றுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten