தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 april 2013

யுத்தத்தால் சேதமடைந்த வர்த்தக நிலையங்களை புனரமைக்க இந்தியா 91 மில்லியன் உதவி !


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சேதமடைந்த வர்த்தக நிலையங்களை புனரமைக்க இந்தியா 91 மில்லியன் ரூபாவினை வழங்கவுள்ளதாக யாழ் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் இணையத்தினர் இணைந்து இந்த இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த புனரமைப்பு பணிக்காக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 1230 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாவும் இவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 11ம் திகதி கிளிநொச்சியில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கான காசோலைகள் இலங்கைக்கு நாளைய தினம் விஜயம் செய்யவுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களினால் வழங்கப்படவுள்ளதாக இந்திய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten