தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 april 2013

இலங்கைக்கு தெற்கே சீன நீர்மூழ்கி கப்பல்கள்: பீதியில் இந்தியா !


இந்து சமுத்திரத்தினுள் சீன அணு நீர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி வந்துபோவதாகவும் இலங்கைக்கு நேர் தெற்கே 13சந்தர்ப்பங்களில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் காணப்பட்டதாகவும் இந்திய கடற்படையினருக்கு சான்று கிடைத்துள்ளதாக இந்திய பத்திரிகையான ‘ஹெட்லைன்ஸ் ருடே’ தெரிவித்துள்ளது.இனங்காணப்படாத 22 நீர் மூழ்கிகளை நீரில் மூழ்கியிருக்கும் பொருட்களை காட்டும் இந்திய மற்றும் அமெரிக்க கருவிகள் இந்து சமுத்திரத்தில் பதிவு செய்துள்ளன என்று இந்திய கடற்படைத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்து சமுத்திரத்தினுள் இரகசியமாக இவ்வளவு தொகையான சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் வந்துபோக முடிந்தமை இந்திய கடற்படையை கவலைக்கு உட்படுத்தியுள்ளது. அந்தமான் தீவிலிருந்து 90 கிலோமீற்றர் தூரத்திலும் மலாக்க நீரிணைக்கு அண்மையிலும் இலங்கைக்கு தெற்கிலும் சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் வந்துபோயுள்ளன. சீன மக்கள் விடுதலைச்சேனையின் கடற்படைப்பிரிவு அதிநவீன அணு நீர்மூழ்கிகளை 10000 மைல் ஆழ்கடல் பயணத்தில் ஈடுபடுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவை அண்மித்த கடலில் இரகசியமாக நுழைய தயாராகிவருவதாக உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. சுப்ல சமயங்களில் இவை இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிரந்தரமாக நிலைக்கொள்ளவும் முயற்சிக்கலாம் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன.


Geen opmerkingen:

Een reactie posten