தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 april 2013

கௌரவக் கொலை ( Graphic Warning) !


ராஜஸ்தான் மாநிலத்தின், ராஜசமாந்த் நகரில் அங்கத் சிங்க் என்கிற ஒரு ஆதிக்க சாதிக்காரன் வாழ்ந்துவந்தான். அவனுக்கு மினு என்கிற 19 வயதில் ஒரு பெண் இருந்தாள். மினு நீண்ட காலமாக ஒரு தலித் தோழனை காதலித்து வந்தாள். இது ஊருக்கும் தெரியவந்தது. தன் மகள் ஒரு தலித்தை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும், அவளை அடித்து துன்புறுத்தி மனதை மாற்ற முயற்சித்திருக்கிறான் தந்தை. இந்த துன்புறுத்தலுக்கு அஞ்சாத மினு, தான் காதலிக்கும் அந்த தலித் தோழனை பதிவு திருமணம் செய்துகொண்டாள்.

அந்த சாதி வெறிபிடித்த அங்கத் சிங்க், தன் சாதியின் கௌரவத்தை காப்பாற்ற தன் மகளை தன் சாதிக்காரர்கள் முன்னாள் நிறுத்தி..மகளின் தலையை வெட்டி எறிந்துள்ளான். தனது மகளின் தலையை சாதியத்தால் வெட்டி எறிந்த அவன் இதற்கு ஒரு பெயர் கொடுத்திருக்கிறான். அது என்ன தெரியுமா ? "கௌரவக் கொலை" யாம் ! சாதி வெறி இவ்வளவு தூரம் செல்லுமா என்று அனைவரும் அதிர்ந்துபோயுள்ளார்கள். குறிப்பிட்ட நபரை பொலிசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இளகிய மனம் உள்ளவர்கள் புகைப்படத்தை பார்க்கவேண்டாம்.

Graphic Warning 


Geen opmerkingen:

Een reactie posten