தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 april 2013

மாத்தளை மனித புதைகுழியும் சிறிலங்காவின் மழுப்பலும்!


மாத்தளை மனித புதைகுழியும் சிறிலங்காவின் மழுப்பலும்

சிறிலங்காவில் மாத்தளை மனித புதைகுழி விவகாரம் பெரும் பரபரப்பை அடைந்துள்ளது.
இதன் பின்னணியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பங்கு உள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரத்தில் கோத்தாபய ராஜபக்ச குற்றங்களுக்கு உடந்தையாக இருந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டுக் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விக்கு ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க பதிலளிக்க மறுத்துள்ளார்.
மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி குறித்து ஆணைக்குழுவை நியமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாத்தளைப் புதைகுழி தொடர்பாக விசாரிக்க அதிபர் ஆணைக்குழுவை நியமிக்கப் போவதான சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பை ஜேவிபி நிராகரித்துள்ளது.
காலத்தை இழுத்தடிக்கவே சிறிலங்கா அரசாங்கம் அதிபர் ஆணைக்குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து முறைப்படியான நீதிமன்ற விசாரணைகளே நடத்தப்பட வேண்டும் என்றும் ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
உரிய நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணை தேவையென்றால் 1994ம் ஆண்டு சட்டத்தரணி மனோரி முத்துவேகமவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தளை மனித புதைக்குழிக்கு ஆணைக்குழு அமைந்துள்ள ஜனாதிபதி மஹிந்த, முள்ளிவாய்கால் குழிகளுக்கு என்ன சொல்லப் போகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

Geen opmerkingen:

Een reactie posten