தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 februari 2012

நோர்வே அனுசரணையாளர்களை ஓரம் கட்ட முயன்ற மஹிந்த அரசு - மஹிந்தரை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தி இவர்தான்!



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான பேச்சுக்களின்போது நோர்வே அனுசரணையாளர்களை ஓரம் கட்டுகின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசு முயன்று இருக்கின்றது
நோர்வேயை அனுசரணைப் பணியில் இருந்து நீக்கி விடலாம், நேரடியாக பேச்சுக்களில் ஈடுபடலாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைக்கு செய்தி அனுப்பி இருந்தது.

மஹிந்த ராஜபக்ஸவின் இச்செய்தி உதயன் மற்றும் சுடர் ஒளி பத்திரிகையின் உரிமையாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஆகியோர் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சரவணபவன், வித்தியாதரன் ஆகியோரை 2006 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அழைத்து இருந்தார் மஹிந்தர்.

இரகசிய மந்திராலோசனைக் கூட்டம் ஒன்றை இவர்களுடன் நடத்தி இருக்கின்றார். இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் லூசியன் ராஜகருணநாயக்க உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் வெளிவிவகார அமைச்சையோ, சமாதான செயலகத்தையோ சேர்ந்த எவரும் கூட்டத்தில் பங்கேற்று இருக்கவில்லை.

இரு வாரங்களுக்கு அனைத்து விதமான வன்முறை நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் கை விட்டு பரஸ்பரம் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும், நேரடியாக பேச்சுக்களில் ஈடுபடலாம், நோர்வேயின் அனுசரணை தேவை இல்லை என்கிற செய்தியை தமிழ்ச்செல்வனுக்கு அனுப்பக் கேட்டு இருக்கின்றார்.

சரவணபவன், வித்தியாதரன் ஆகியோர் மஹிந்தரின் இச்செய்தியை தமிழ்ச்செல்வனுக்கு அனுப்பி இருந்தனர்.

ஐந்து நிபந்தனைகளை முன்னிறுத்தி பதில் அனுப்பி இருந்தார் தமிழ்ச்செல்வன்.

பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளை அரசு கை விட வேண்டும், துணை ஆயுதக் குழுவினரின் ஆயுதங்களை களைவதுடன் இக்குழுவினரை வடக்கு, கிழக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும், சிறுவர்கள் கருணா குழுவினரால் கடத்தப்படுகின்றமைக்கு உதவி செய்வதை நிறுத்த வேண்டும், யாழ்ப்பாணம் மீதான பொருளாதார தடையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பேச்சு நடத்துவதற்கு உகந்த சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பனவே நிபந்தனைகள்.

நோர்வேயை அனுசரணையாளர் பணியில் இருந்து தூக்குவதற்கும், புலிகளுடன் நேரடியாக பேசுவதற்கும் மஹிந்த அரசு சில முயற்சிகளை செய்து இருக்கின்றது என்றும் ஆனால் புலிகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளராக நோர்வேயினர் இருப்பார்கள் என்று நோர்வே தரப்புக்கு புலிகள் அறிவித்து உள்ளனர் என்றும் புலிகளின் சமாதான செயலகத்துக்கு பொறுப்பாளராக இருந்த புலித்தேவன் 2006 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி பி. பி. சி செய்திச் சேவைக்கு தெரிவித்து இருக்கின்றார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2006 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் கிடைக்கப் பெற்று உள்ளன.
மஹிந்தரை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தி இவர்தான்!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் தத்துவ ஆசிரியராக அமைச்சர் டலஸ் அழகப்பெரும இருந்து வருகின்றார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவதானித்து உள்ளது.
-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவராக தொடர்ந்தும் இருந்து வருகின்றார்.இவர் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றமைக்கு அமெரிக்காவில் இருந்து நாட்டுக்கு வந்தார்.
மஹிந்தரின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனையை உருவாக்குகின்றமைக்கு மஹிந்தருக்கு பேருதவிகள் செய்தார். மஹிந்தரின் தேர்தல் பேச்சுக்களில் அநேகமானவை இவரால் ஆக்கப்பட்டவை.
பிரதமர் பதவி உட்பட முக்கியமான அமைச்சுப் பதவிகளுக்கு அமைச்சர்களை நியமிக்கின்றமையில் இவரின் செல்வாக்கு அதிகமாக இருந்து உள்ளது.
மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் அரசில் இருந்து நீக்கப்பட்டமைக்கு இவரே காரணம்.-
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் கிடைத்து உள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten