தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 februari 2012

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்!- சுப்பிரமணிய சாமி !!



இலங்கை  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள சுப்பிரமணிய சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய சாமி கொடுத்துள்ள பேட்டி விவரம்:
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்.
ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம் என்பதால் அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்ச.
இதனால் ராஜபக்சவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் தோல்வியடைந்திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி

Geen opmerkingen:

Een reactie posten