தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 augustus 2013

முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் பற்றி தெரியாத பிரதானமான பக்கங்கள் சில..


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வடஇந்தியாவின் சிதார் இசைக்கருவியை வாசிக்கும் பயிற்சியைப் பெற்ற ஒரே இலங்கைத் தமிழராவார்.
இந்தத் தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
சிதார் இசைக்கருவியைத் தான், கொழும்பில் சித்ரசேன நடன,இசைப் பாடசாலையில் ரைடஸ் நொனிஸ் என்ற ஆசிரியரிடம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கற்றுக் கொண்டதாக, விக்னேஸ்வரன் இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்வு என்று, 1979 அல்லது 80இல் நீதிபதிகளின் கூட்டம் ஒன்றில் ஒன்றில் சிதார் இசைக்கருவியை, இசைத்ததை முக்கியமாகக் குறிப்பிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீதிபதியான பின்னர், சிதார் கருவியுடன் நேரத்தை ஒதுக்க முடியாது போய் விட்டதாகவும், ஆனாலும், தான் பங்கேற்கும் பஜனைகளின் போது பாடப்படும் பாடல்கள் வடஇந்திய இசைப்பாணியில் பாடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரை இந்திய எக்ஸ்பிரஸ், “தமிழ்த் தேசியவாதியாகவும், தமிழ் இலக்கியம் மற்றும் இந்து மதத்தில் விற்பன்னராகவும் விக்னேஸ்வரன் உள்ள போதிலும், ஒரு பொதுநோக்காளராகவும், பன்நலத்திரட்டாளராகவும் இருக்கிறார்.
இந்தவிதத்தில் வழக்கமான இலங்கைத் தமிழர்களிடம் இருந்து வேறுபடுகிறார்.
இலங்கைத் தமிழர்கள் கர்நாடக சங்கீகத்தை அல்லது தமிழ் இசையை கற்பார்கள். வீணை, மிருதங்கத்தை இசைப்பார்கள்.
வயலின் அல்லது வேறு ஏதாவது மேற்கத்திய இசை அல்லது வடஇந்திய இசைக்கருவிகளை கற்குக் கொள்வார்கள்.
ஆனால் இந்துஸ்தானி இசையையோ வடஇந்திய நடனங்களையோ நிச்சயமாக கற்பதில்லை.
சேர்.பொன் இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் போன்றவர்களின் குடும்பத்தை சேர்ந்தவரான விக்னேஸ்வரனின் இரண்டு புதல்வர்கள் சிங்களக் குடும்பங்களில் திருமணம் செய்துள்ளனர்.
ஒருவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மகளைத் திருமணம் செய்துள்ளார்.
மற்றவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேசரலால் குணசேகரவின் பெறாமகளைத் திருமணம் செய்துள்ளார்.
விக்னேஸ்வரனின் தனிப்பட்ட மற்றும் குடும்பப் பின்னணி என்பன, அவர் போருக்குப் பின்னரும் பிளவுபட்டிருக்கும் தமிழர்களையும் சிங்களவர்களையும், அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், இணைக்கும் பாலமாக இருப்பார் என்ற நம்பிக்கையை சிங்களவர்கள் பலருக்கும் கொடுத்துள்ளது.” என்று அறிமுகப்படுத்தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten