தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

பத்திரிகைகளில் வலம்வந்த கல்யாணராமன் பொலிஸாரிடம்


பத்திரிகைகளில் போலி பெயரில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து 10 பெண்களை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதுடன் அவர்களிடமிருந்த 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்க ஆபரணங்களை மோசடி செய்து தலைமறைவாகியவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாத்தளை அலுவிஹாரை பிரதேசத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தையான இவர் பத்தரிகைகளில் போலி பெயரில் மணமகள் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.
அந்த விளம்பரங்களை பார்த்து தன்னுடன் தொடர்பு கொள்ளும் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களை ஏமாற்றி ஹோட்டல்களுக்கு கூட்டிச்சென்று திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறிய பின் அவர்களுடன் பாலியல் உறவு கொண்டு தங்க ஆபரணங்களையும் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பெலியத்த பிரதேசத்தில் தலைமறைவாக இருந்தபோது பெலியத்த பொலிஸாரினால் கைது செய்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நடாத்தப்படுகின்றன.
இவருக்கு எதிராக நாட்டின் பல நீதிமன்றங்களில் சுமார் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten