தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

கொழும்பு தெற்கு துறைமுகத்தை நேற்று வரை 25 லட்சம் பொதுமக்கள் பார்வை!


நவீன தொழில்நுட்பங்களுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தைப் பார்வையிடுவதற்கு நேற்று வரை 25 லட்சம் பொதுமக்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 8ம் திகதி முதல் 13ம் திகதி வரை மேற்படி துறைமுகத்தைப் பார்வையிடுவதற்கான அனுமதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க இதற்கான இறுதி தினம் இன்றாகும்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நேற்று வரை 25 இலட்சம் பொதுமக்கள் துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளதாக துறைமுக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
நேற்றும் பெருந்தொகையானோர் துறைமுகத்தைப் பார்வையிட வருகை தந்ததாகவும், இன்றைய தினமும் மாலை வரை பொதுமக்கள் துறைமுகத்தைப் பார்வையிட முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten