மட்டக்களப்பு, வாழைச்சேனையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இயந்திரப் படகு ஒன்று காணாமல் போன நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கல்முனை கடற்கரையை வந்தடைந்துள்ளதாக படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.முபாறக் தெரிவித்தார்.
கடந்த 03ம் திகதி சனிக்கிழமை தொழிலுக்காக ஆழ்கடலுக்கு இந்த இயந்திரப் படகு சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயிருந்தது.
படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக படகை செலுத்த முடியாமல் தாங்கள் கஷ்டப்பட்டதாகவும், இந்த நிலையில், படகிலிருந்த கூரைப்பாயின் உதவியுடன் காற்று வீசிய திசையை நோக்கி கல்முனைக் கடற்கரையை தாங்கள் வந்தடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இப்படகில் பயணித்த மூவரும் தேகாரோக்கியத்துடன் உள்ளதாகவும் படகு உரிமையாளர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten