தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

யப்பான் நாட்டின் இரு யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்...!


ஜப்பான் நாட்டின் இரண்டு யுத்தக் கப்பல்கள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
” அரிஅக்கே”, “செடொகரி“ என்ற பெயர்களைக் கொண்ட இந்த இரு யுத்தக் கப்பல்களில் ஜப்பானிய கடற்படையின் கட்டளைத் தளபதிகளும் வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் கடற்படைத் தளபதியான வைஸ் அடமிரல் ஜயநாத் கொலம்பகேயின் பணிப்பின் பேரில் மேற்குப் பிராந்திய கட்டளைத் தளபதியான ரியல் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க இவர்களை வரவேற்றார்.
இந்த இரண்டு யுத்தக் கப்பல்களும் சில நாட்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்குமெனக் கூறப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten