யாழ். கொட்டடி பகுதியில் இளைஞன் ஒருவன் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில், படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் குறித்த இளைஞனின் இடது கையும் காலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது...
இறால் வலை திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரென கருதப்படும் மேற்படி இளைஞன், இன்று திங்கட்கிழமை காலை நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
இறால் வலை திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரென கருதப்படும் மேற்படி இளைஞன், இன்று திங்கட்கிழமை காலை நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மற்றைய குழுவினர் ஒன்று சேர்ந்து குறித்த இளைஞனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இச்சம்பவத்திலேயே அவ்விளைஞனின் இடது கையும் காலும் பாரிய வெட்டுக்காயத்திற்குள்ளாகியுள்ளதாக அறிய முடிகிறது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten