தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

யாழ். - கொழும்பு தனியார் சொகுசு பஸ்ஸில் வெளிநாட்டு பயணிகளிடம் நாகரிகமற்ற முறையில் நடக்கும் நடத்துனர்!


யாழ். பருத்தித்துறையிலிருந்து கொழும்பு செல்லூம் தனியார் சொகுசு பஸ்கள் பயணப் பொதிகளுக்கு கட்டணம் அறவிடுவதாக பயணிகள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது
அத்தோடு பயணிகளோடு நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் வெளிநாட்டு நாணயத்தில் பயண அனுமதி சீட்டைப் பெறுமாறு வற்புறுத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பாக பருத்தித்துறையிலிருந்து புறப்பட்ட ரிரிபி தனியார் சொகுசு பஸ்லில் இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக வெளிநாட்டு பயணியான பாதிக்கப்பட்டவரான காத்திகேசு நவநீதன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் போக்குவரத்து ஆணைக்குழு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பயணிகளோடு மரியாதையாக நடந்து கொள்வதற்குரிய நடத்துனருக்கு சாரதி பயிற்சி போன்று பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என பயணிகள் குறிப்பிடுகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten