தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து சிறப்பித்த நிகழ்வு !


கனடாவில் ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து சிறப்பித்த இராப்போசன விருந்துபசார நிகழ்வு
ரொறன்ரோ � ஸ்காபறோ பகுதியில் நேற்றைய தினம் மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்த இராப்போசன விருந்துபசார நிகழ்வி்ல் பெருமளவான வர்த்தகப் பிரமுகர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
90 Nolan Court � Jaasmin Banguet Hall மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடிய கிளைத் தலைவர் திரு- நக்கீரன் தங்கவேலு தலைமையிலான கனடாக்கிளை ஏற்பாடு செய்திருந்தது
நிகழ்வை திரு. குகதாசன், திரு. துரைராஜா, திரு. வீரசுப்பிரமணியம் ஆகியோர் முன்னின்று ஒருங்கமைத்து நடாத்தினர்.
நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமது தற்போதைய அரசியல் செயற்பாடுகள் பற்றியும் வட மாகாணசபைத் தேர்தலை தாம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதன் கட்டாயப்பாட்டையும் விரிவாக விபரித்து உரை நிகழ்த்தியதோடு மக்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
கூட்டமைப்பினரது கனடாக்கிளையினர் ஏற்பாடு செய்திருந்த மேற்படி நிகழ்விற்கு ரொறன்ரோவிலுள்ள தமிழர் அமைப்புகளான கனேடிய தமிழர் தேசிய அவை (NCCT), கனேடிய தமிழர் காங்கிரஸ்(CTC), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE) மற்றும் நாம் தமிழர் கனடா அகிய அமைப்புகளது பிரதிநிதிகள், கனேடிய தமிழர் வர்த்தக சங்கம, தமிழர் சட்டத்தரணிகள் சங்கம் ஆகியனவும் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten