தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

வெலிவேரிய தொடக்கம் கிரான்பாஸ் வரை: CC TV ல் சிக்கிய ஆசாமிகள் !


வெலிவேரிய பகுதியில் சுத்தமான குடிநீர் வேண்டும் என்று போராடிய மக்களை இராணுவம் சுட்ட பிரச்சனை ஓயமுன்னரே, கொழும்பு கிரன்பாஸ் இல் உள்ள மசூதி மீது தாக்குதலும் நடைபெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த இத் தாக்குதலுக்கு முஸ்லீம் குழுக்களே காரணம் எனவும், முஸ்லீம்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து சண்டையிட்டதால் தான் பள்ளிவாசல் தாக்கப்பட்டது என்றும் முதலில் பொலிசார் கூறியிருந்தார்கள். உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதில் இலங்கைப் பொலிசார் உலகப்புகழ் பெற்றவர்கள் அல்லவா ! ஆனால் CC TV பொய் சொல்லுமா ?

முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியான கிரான்ட்பாஸ், ஸ்வர்ன மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றபோது அங்கே புத்த பிக்குகள் சாதாரண உடையில் இருந்ததும், இதேவேளை சிங்களக் காடையர்கள் கற்களை வீசி எறிவதும் அருகில் உள்ள CC TV இல் நண்றாகப் பதிவாகியுள்ளது. ஆனால் பொலிசாரோ இல்லை இது உள்கோஷ்டிக் கலவரம் என்று பூ சுத்தப் பார்த்தார்கள். சிங்களக் காடையர்கள், மற்றும் பொதுமக்கள் தரிக்கும் உடையணிந்து வந்த புத்த பிக்குகளே மேற்படி பள்ளிவாசலைத் தாக்கி நாசம் செய்துள்ளார்கள். இதில் பொதுபலசேனா மற்றும் இராவண சக்தி போன்ற அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மொத்தத்தில் ஆசாமிகள் சிலர் வகையாகச் சிக்கிக்கொண்டார்கள். 

இந்த CC TV ல் பதிவாகியுள்ள காட்சிகள் அனைத்தையும், பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். மேற்கொண்டு பொலிசாரே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து கோஷ்டி மோதல் என்று கூறிவந்த பொலிசார், வாயடைத்துப்போயுள்ளார்கள். மேற்படி இனி என்ன நடக்கப் போகிறது என்பதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் !




Geen opmerkingen:

Een reactie posten