தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 augustus 2013

--------மதக்கலவரங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்............


மோடியின் சாதனைகள் பற்றி எவ்வளவுதான் பிஜேபி முன்வைத்தாலும் குஜராத் கலவரங்களே பிற கட்சிகளின் பிரதான ஆயுதமாக இருக்கப்போகிறது. இந்தநிலையில் சுதந்தர இந்தியாவில் இதுவரை நடந்திருக்கும் கலவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்பது மிகவும் அவசியம்.

ஐந்து நபர்களுக்குக் குறைவாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வகுப்புவாதம் சார்ந்த குண்டுவெடிப்புகளும் இதில் சேர்க்கப்படவில்லை.

1967க்குப் பிறகு நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களும் அப்போது ஆட்சியில் இருந்த கட்சியும்.
எண் வருடம் இடம் உயிரிழப்பு ஆண்ட கட்சி முதலமைச்சர்

1 1967 (இடம்)ஹாதியா ராஞ்சி (கொல்லப்பட்டவர்கள்)183 (ஆட்சி செய்த கட்சி)ஜன கிராந்தி தளம்(முதலமைச்சர்) எம்.பி.சின்ஹா

2 1969 அகமதாபாத் (கொல்லப்பட்டவர்கள்)512 காங்கிரஸ் ஹிதேந்திர கே தேசாய்
3 1970 ஜல் காவ் (கொல்லப்பட்டவர்கள்)100 காங்கிரஸ் வசந்தராவ் நாயக்
4 1979 ஜம்ஷேட்பூர் (கொல்லப்பட்டவர்கள்)120 ஜனதா கட்சி கர்பூரி தாகூர்
5 1980 மொராதாபாத் (கொல்லப்பட்டவர்கள்)1500 காங்கிரஸ் வி.பி.சிங்.
6 1983 நெலே, அஸ்ஸாம் (கொல்லப்பட்டவர்கள்)1819 ஜனாதிபதி ஆட்சி
7 1984 பிவந்தி (கொல்லப்பட்டவர்கள்)146 காங்கிரஸ் வசந்ததா பட்டில்
8 1984 டில்லி (கொல்லப்பட்டவர்கள்)2733 காங்கிரஸ் (யூனியன் பிரதேசம்) -
9 1985 அகமதாபாத் (கொல்லப்பட்டவர்கள்)300 காங்கிரஸ் எம்.எஸ்.சோலன்கி
10 1989 பகல்பூர் (கொல்லப்பட்டவர்கள்)1161 காங்கிரஸ் எஸ்.என்.சிங்
11 1990 டில்லி (கொல்லப்பட்டவர்கள்)100 யூனியன் பிரதேசம்
12 1990 ஹைதராபாத் (கொல்லப்பட்டவர்கள்)365 காங்கிரஸ் சென்னா ரெட்டி
13 1990 அலிகர் (கொல்லப்பட்டவர்கள்)150 ஜனதாதளம் முலாயம் சிங்
14 1992 சூரத் (கொல்லப்பட்டவர்கள்)152 காங் + ஜனதா தளம் சிமன்பாய் படேல்
15 1992 கான்பூர் (கொல்லப்பட்டவர்கள்)254 ஜனாதிபதி ஆட்சி
16 1992 போபால் (கொல்லப்பட்டவர்கள்)143 ஜனாதிபதி ஆட்சி
17 1993 மும்பை (கொல்லப்பட்டவர்கள்)872 காங்கிரஸ் சுதாகர் ராவ் நாயக்
18 2002 குஜராத் (கொல்லப்பட்டவர்கள்) 1267 பி.ஜே.பி. நரேந்திர மோடி

மேலே இடம்பெற்றிருக்கும் 18 கலவரங்களில் 10 காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது நடந்திருக்கின்றன. மூன்று ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தபோதும் நான்கு பிற கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் நடந்திருக்கின்றன. பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது ஒன்று.

இதுமட்டுமல்லாமல் 1990 முதல் 1995 வரை குஜராத்தில் மட்டும் 245 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குஜராத்தின் மத மோதல் வரலாறு இது. மோடியின் ஆட்சி காலத்தில் 2002க்குப் பிறகான பத்து வருடங்களில் எந்த பெரிய மத மோதலும் நடந்திருக்கவும் இல்லை. இத்தனைக்கும் மோடி பெரும் வில்லனாகச் சித்திரிக்கப்படும் அந்த வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களில் 30%த்தினர் இந்துக்கள்.

இவையெல்லாம் மோடி செய்தது சரிதான் என்று சொல்வதற்காகப் பட்டியலிடப்பட்டவை அல்ல. உண்மையில் மோடியும் பி.ஜே.பி.யினரும் எந்த அளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்களோ அதைவிட பல மடங்கு கூடுதலாக காங்கிரஸும் அதன் தலைவர்களும் விமர்சிக்கப்படவேண்டும்.

(ஆழம் ஜூன் 2013 இதழில் வெளியான கட்டுரையின் வடிவம்).
By: தமிழ் செய்திகள்

Geen opmerkingen:

Een reactie posten