தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 augustus 2013

காதல், பாலியல் பிரச்சனைகளால் தப்பியோடும் படையினர் !


இலங்கை கடற்படை மற்றும் இராணுவப் பிரிவில் இருக்கும் பல படைச் சிப்பாய்கள் தப்பியோடிவருவதாக அறியப்படுகிறது. இராணுவ முகாம்களில் இளம் படையினர் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதால் சிலர் தப்பியோடுவதாகவும், மேலும் பலர் தமது காதல் மற்றும் பணப் பிரச்சனை காரணமாக தப்பியோடுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே படையினர் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாலும் பல படையினரை, இலங்கை இராணுவம் சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது. 2013 ஜூலை மாதம் 23ம் திகதி வரையில் முப்படையைச் சேர்ந்த சுமார் 9, 097 பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதனை இராணுவத்தினர் உறுதிசெய்துள்ளார்கள்.

அதாவது விடுதலைப் புலிகளோடு போர் நடைபெற்ற காலத்தில், தப்பியோடிய இராணுவத்தைக் காட்டிலும் தற்போது அதிகளவான இராணுவத்தினர் தப்பியோடி வருகிறார்கள். மற்றும் பலரை இராணுவத்தினர் சேவையில் இருந்து நீக்கவேண்டி உள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten