4 லட்சம் பிரித்தானியத் தமிழர்கள் வாக்குகளை இழக்கவிருக்கும் கான்சர்வேட்டிவ் கட்சி !
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெலத் மாநாட்டிற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் செல்லக்கூடாது, என்று தமிழர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். பிரித்தானியாவில் இயங்கிவரும் தமிழ் சொலிடாரிட்டி குழுவினர் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையினர் இதுதொடர்பாக பிரித்தானிய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார்கள். சுமார் 4 லட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில், அவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுமாறு பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சுக்கு தமிழ் சொலிடாரிட்டி குழுவினர் இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்கள். பிரித்தானிய வெளியுறவு அமைச்சு இதற்கு பதில் வழங்கியுள்ளது. அதில் தமது நாட்டுத் தலைவர்கள் நடக்கவுள்ள காமன்வெலத் மாநாட்டில் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என்று அது திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது தமிழர்களை பெரும் அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரித்தானியாவில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழர்களின் வாக்குகள் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆனால் அதனைக் கூடப் பொருட்படுத்தாது ஆழும்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதன் தலைவர் மற்றும் பிரித்தானியப் பிரதமர் தமிழர்களை மதிக்காது தான் இலங்கை செல்வேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது, தமிழர்களை அவமதிக்கும் செயலாக அமைந்துள்ளது. எனவே இனிவரும் தேர்தலில் பிரித்தானியத் தமிழர்கள் கான்சர்வேட்டிவ் கட்சிக்கு தமது வாக்குகளைப் பதியவேண்டாம் என்று சாரா சாஜ் என்னும் (ஆங்கிலப் பெண்) தமிழ் உணர்வாளர் தெரிவித்துள்ளார். (வீடியோ இணைப்பு)
நன்றி தமிழ்நெட்(tamilnet.com)
Geen opmerkingen:
Een reactie posten