இலங்கையில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி, கொத்துக் கொத்தாக கொலைசெய்துள்ள அரச படைகள் தற்போது முஸ்லீம் மக்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். இதுபோக பொதுபலசேனா, ராவண சத்தி போன்ற சிங்கள தீவிரவாத அமைப்புகள் பள்ளிவாசல்களை இடித்து தள்ளி முஸ்லீம்களை இல்லாதொழிக்க முயற்சித்து வருகிறது. ஆனால் கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து சில முஸ்லீம் தலைவர்கள் கோட்டபாயவுக்கு பார்டி ஒன்றைக் கொடுத்துள்ளார்கள். கொழும்பில் உள்ள ஹோட்டல் ரமடாவில் இது நிகழ்ந்துள்ளது.
அங்கே பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார் கோட்டபாய ராஜபக்ஷ. அங்கே கூடியிருந்த சில முஸ்லீம் தலைவர்கள் தமது மதத்தை காவல் காக்கும் தெய்வம் கோட்டபாய என்று பாராட்டியுள்ளார்களாம். இந்த பாராட்டு மழையில் நனைந்து , அங்குள்ள லசி மற்றும் பிரியாணியை உட்கொண்டுள்ளார் கோட்டபாய. (படம் இணைக்கப்பட்டுள்ளது) இதனைத் தான் பாலுக்கும் காவால்.... பூனைக்கும்..... என்று சொல்லுவார்களோ ?
Geen opmerkingen:
Een reactie posten