தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 maart 2013

அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை! இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது!


இலங்கைக்கு எதிரான அமெரிக்காத் தீர்மானம் எரிப்பு: சென்னையில் நூதனப் போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 07:09.13 AM GMT ]
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி தீர்மானத்தை தமிழக இளைஞர் முன்னணி அமைப்பனினர் ‘பாடைகட்டி’ எடுத்து சென்று எரித்து போராட்டம் நடத்தினர்.
சென்னையில் இன்று தமிழக இளைஞர் முன்னணி அமைப்பு சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
லயோலா கல்லூரி அருகில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இலங்கைக்கு எதிராக கோஷமிட்டபடி சென்ற அவர்களை பொலிசார் கைது செய்தனர்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வருகின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். அதில் சில திருத்தங்களை செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ச மீது பொது விசாரணை நடத்த வேண்டும். அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல், முற்றுகை போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.
மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வந்ததால் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது.
அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களும், மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து, அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளும் இன்று முதல் மூடப்பட்டன. மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க துறை ரீதியான நடவடிக்கை ஒருபுறம் எடுத்தாலும் கூட அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள், தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் இன்று 9-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
இரண்டாம் இணைப்பு-
அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும்  பாடையில் கட்டி எரிக்கப்பட்டது
தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைத்தும், ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பதாகவும் உள்ள வகையில், அமெரிக்கா முன்வைத்துள்ள ஐ.நா. தீர்மானத்தையும், இலங்கை அரசைப் பாராட்டி இந்திய அரசு ஜெனீவாவில் அளித்துள்ள அறிக்கையும், இன்று தமிழக இளைஞர் முன்னணி சார்பில், பாடையில் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
சென்னை
சென்னை நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வாயிலிருந்து, தமிழக இளைஞா முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையில் துவங்கிய பேரணியில், அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டது. 
நுங்கம்பாக்கம் சுடுகாடு வரை சென்ற பேரணியின் முடிவில், சுடுகாடு வாயிலில் அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசுக் கொடியும், சிங்களப் பேரினவாத அரசின் கொடியும் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 
நிகழ்வில், தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத், தாம்பரம் தலைவர் தோழர் இளங்குமரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் அகத்தாய்வன் உள்ளிட்ட த.இ.மு. நிர்வாகிகளும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், கொண்டல்சாமி உள்ளிட்டவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். 
ஓசூர்
ஓசூரில், இன்று காலை பேருந்து நிலையம் முன்பு 10.30 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில், மோசடியான அமெரிக்கத் தீர்மானமும், இந்திய அரசின் அறிக்கையும் பாடை கட்டி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
போராட்டத்தில், கிருட்டிணகிரி நகர அமைப்பாளர் தோழர் பெ.ஈசுவரன், தோழர் செம்பரிதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில், திரளான உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், இன்று காலை தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் மோசடி அறிக்கையையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திரளான இளைஞர்களும் பங்கேற்றனர். தமிழக இளைஞர் முன்னணி மூத்தத் தோழர் நா.வைகறை , ஐ.நா. மன்ற அமெரிக்கத் தீர்மானம் மற்றும் அதில் இந்திய அரசு முன்வைத்த அறிக்கை ஆகியவை ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் வஞ்சக செயல் என்பதை விளக்கிப் பேசினார்.
அப்போது இந்திய - சிங்கள அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுக்கு இடையே ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய -அமெரிக்க தீர்மானத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை! இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது!
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 06:49.41 AM GMT ]
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்களவர்களுக்கு சாதகமாக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே 3 முறை திருத்தங்களுடன் வரைவு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று 4-வது முறையாக திருத்தம் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் இறுதி தீர்மானம் ஆகும்.
கடந்த ஆண்டு இலங்கை மந்திரி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் சந்தித்து இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனால் இலங்கை தானாக முன்வந்து ஆணைக்குழுவை நியமித்து கற்றுக் கொண்ட பாடங்கள் என்ற பெயரில் விசாரணை நடத்தியது. ஆனால் அதன் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு முன் வரவில்லை. அதற்கு மாறாக இலங்கையில் போருக்கு பின்னரும் தமிழர்கள் மீதான தாக்குதலும், சித்ரவதைகளும் நீடிக்கிறது.
இதையடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இலங்கை கெஞ்சியதால் தீர்மானத்தின் வாசகங்களின் தாக்கம் குறைக்கப்பட்டது.
அதேபோல் இந்த முறையும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தில் 4 முறை திருத்தங்கள் செய்துள்ளது. ஒவ்வொரு முறையாக இலங்கைக்கு எதிரான வாசகங்களின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என கோரப்பட்டு வந்த நிலையில் அது ஏற்கப்படவில்லை. போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
குற்றம் செய்த நாடே குற்றத்தை விசாரித்தால் எப்படி இருக்கும் எனவேதான் சர்வதேச விசாரணை தேவை என கோரப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. இதேபோல் இலங்கைக்கு செல்லும் குழுக்கள் அந்நாட்டிடம் ஒப்புதல் பெற்ற பிறகே செல்ல வேண்டும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் எல்லாம் இலங்கைக்கு சாதகமானவை. இதன் மூலம் இலங்கைக்கு சாதகமாகவே அமெரிக்கா கொண்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
இதேபோல் இந்தியாவும் இலங்கைக்கு சாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த குறிப்பை நீக்க கோரும் திருத்தத்தை இந்தியா தான் கொண்டு வந்தது. அதை ஏற்று அமெரிக்கா அந்த குறிப்பையும் நீக்கி விட்டது. அதேபோல் இலங்கை செல்லும் குழுக்கள் இலங்கையிடம் ஒப்புதல் பெற்றே செல்ல வேண்டும் என்று இந்தியா திருத்தம் கொண்டு வந்தது. இந்த திருத்தத்தையும் அமெரிக்கா ஏற்றுக் கொண்டது.
ஆனால் இந்தியா தரப்பில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தப்படவில்லை. இதுதான் தமிழர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும். ஆனால் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சிங்களர்களுக்கு ஆதரவாகவே இந்தியா செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவு தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten