தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 17 maart 2013

போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள்! குற்றம் சுமத்தப்பட வேண்டியவர்கள் அல்ல- அக்னிப் பரீட்சையில் காசி ஆனந்தன் [ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 11:58.56 AM GMT ]


தமிழ் மக்களை சிங்களவர்கள் மிகக் கொடூரமாக அழித்துக்கொண்டிருந்த காரணத்தினாலேயே புலிகள் உருவாகினார்கள் இதுதான் உண்மையான வரலாறு என இந்திய தொலைக்காட்சி வழங்கும் அக்னிப் பரீட்சை என்னும் நிகழ்ச்சியில் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
எனவே போராளிகள் போற்றப்படக்கூடியவர்களே அன்றி குற்றம் சுமத்தப்படவேண்டியவர்கள் அல்லர். அவர்கள் விடுதலையாளர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்  ‘விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் விடுதலையாளர்கள்` என கிலாரி கிளிங்க்டன் ஒருதடவை அமெரிக்காவில் உரையாற்றும்போதே வெளிப்படையாக கூறியிருந்தார்.
அத்தோடு, ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தினால் பெரிதாக எதுவும் நடந்துவிடப்போவதில்லை
இந்தியா உறுதுணையாக இருந்தாலும், இல்லாவிடினும் தமிழீழம் மீண்டும் மலரும் என உறுதியாகவும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten