ஊடகங்களே,நீங்கள் இசுலாமியர்களை பிசாசுகளாக சித்தரிக்கிறீர்கள் !!!
(ஊடகவியாலளர்கள் ஆய்வரங்கிலேயே ஊடக விபச்சாரர்களை செருப்பால் அடித்த கட்ஜு !!!)
கடந்த ஞாயிறு அன்று ஹைதராபாத்தில் ’தி ஹிந்து’ நாளேடு ஏற்பாடு செய்திருந்த ஆய்வரங்கு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் உச்ச நீதிமன்ற நிதிபதி மார்கண்டேய கட்ஜு;
ஊடகங்கள் இசுலாமிய சமூகத்தினை பிசாசுகளாக சித்தரிக்கவே விரும்புகின்றன.
நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் குண்டு வெடித்தாலோ அல்லது ஏதேனும் ஒரு விரும்ப தகாத சம்பவம் நடைபெற்றாலோ ஒரு மணி நேரத்திற்குள்ளாக
இந்தியன் முஜாஹிதீன்களையோ,ஜெய்சே முஹமதினையோ,ஹர்குதல் ஜிஹாதுல் இசுலாமினையோ பெயரை சொல்லி தாங்கள் தான் அந்நிகழ்விற்கு பொறுப்பு என்ற செய்தியோடு தொலைகாட்சி நிறுவனங்கள் ஒரு குறுஞ்செய்தி,அல்லது ஒரு மின்னஞ்சலை ஆதராமாக காட்டி மக்கள் முன் அரங்கிற்கு வருவார்கள்.
இந்த மின்னஞ்சலையும் இந்த குறுஞ் செய்தியையும் யார் வேண்டுமானாலும் அனுப்பலாம்.இதை தான் உங்கள் தொலைகாட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் மிக முக்கிய ஆதாராமாக தொடர்ந்து காட்டி காட்டி இசுலாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு வெடிகுண்டுகளை தவிர்த்து வேறு எந்த ஒரு நல்ல பண்பையும் அவரிகளிடத்தில் எதிர்ப்பார்க்க தேவையில்லை என்பன போன்ற செய்திகளைகளையே மக்கள் முன் பரப்புரை செய்கிறீர்கள்.
ஒட்டு மொத்த இசுலாமிய சமூகத்தையும் கொடிய சாத்தான்களாக சித்தரித்து மத துவேசத்தை வளர்ப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதுதானா பொறுப்புள்ள ஊடகங்களின் முக்கிய பணி?
நமது நாட்டில் மத வன்முறைகளுக்கு ஊக்கமளிக்கும் மிக கேவலமான செயல் இதுவே என்று நான் நம்புகிறேன்.
இந்த அநீதிக்கு எதிராக நான் குரல் கொடுக்கும் போது ஊடக சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொள்கிறேன் என்று என் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
மத வன்முறைகளை பொது சமூகத்தினரிடத்தில் வளர்தெடுக்க உங்களுக்கு யார் சுதந்திரம் கொடுத்தது?
மிகவும் மோசமான இந்த வழகத்தினை ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பத்திரிக்கைகள் தங்களின் பொறுப்புணர்வை உணரவேண்டும்.. நாட்டின் மீது உள்ள பொறுப்புணர்ச்சி பற்றி சிந்திக்க வேண்டும்.
ஊடகங்கள் தங்களுக்கு துவேசத்தையும் அநீதியையுமே தருகிறது என்று இசுலாமியர்களுக்கு தோணாத விதம் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.
இசுலாமியர்களுக்கு வங்கிகள் கடன் தருவதில்லை
நாட்டில் வேலை வாய்பிலும் அவர்களுக்கு உரிய பங்கு இல்லை...ஆகையால் பொறுப்புணர்ந்து நேர்மையாக செயல்படுங்கள் என்று மிகவும் ஆக்ரோசமாக பேசினார்.
http://
## இவிங்களை எத்தனை தடவை செருப்பால் அடித்தாலும் திருந்த மாட்டானுங்க..
இந்த செய்தி கூட தமிழ் ஊடகங்களில் வெளியிடவில்லை..ஊடக விபச்சாரர்களே..நீங்கள் உயர உயர பறந்தாலும் இறுதியில் உண்மை என்ற காற்று உங்களை விழு வைக்கும் இடம் குப்பையாகத்தான் இருக்கும்#

Geen opmerkingen:
Een reactie posten