தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 april 2013

தனக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேறுமாறு அருண் தம்பிமுத்து பிள்ளையானுக்கு உத்தரவு !


முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி. சந்திரகாந்தன், முதலமைச்சராக கடந்த 2008ம் ஆண்டு பதவியேற்ற காலத்திலிருந்து மட்டக்களப்பு லேக் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைப்பாளரான தம்பிமுத்துவின் வீட்டிலேயே தனது உத்தியோக பூர்வ இல்லத்தினை வைத்து நடாத்தி வருகின்றார்.
தற்போது குறித்த வீடும் சொத்துக்களும் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்துவின் பெயரில் உள்ளது.
அருண் தம்பிமுத்து தற்போது வெளிநாட்டிலிருந்து வந்து மட்டக்களப்பு மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளராக பதவியேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார்.
இவ்வேளையில் தனக்குச் சொந்தமான வீட்டில் முன்னாள் முதலமைச்சர் குடியிருப்பதனை ஆட்சேபித்து உடன் தனது எல்லையிலிருந்து வெளியேறுமாறு முன்னாள் முதலமைச்சருக்கு உத்தரவிட்டார்.
இதனை பொருட்படுத்தாது இதுவரை காலமும் தனது எல்லையிலிருந்து முன்னாள் முதலமைச்சர் வெளியோறாமலிருப்பதனையிட்டு தான் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் மேலும் கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தற்போது தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தினை மாற்ற வேண்டிய கட்டாயத்திலும், மற்றுமொரு இடம் பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten