உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகமாக 20 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவரும் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கத்திற்கு இவ்வருடத்திற்கான வெளிநாட்டவர்களுக்கான விருது கனடா பத்திரிகை நிறுவனத்தினால் வழங்கப்படவிருக்கின்றது.
கனடா பத்திரிகை நிறுவனம் நடத்திவருகின்ற விருது விழா கடந்த 9 வருடங்களாக கனடாவின் ஸ்காபுறோ நகரில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் பேசும் வர்த்தகத்துறை வெற்றியாளர்களும் கலைஞர்களும் கலந்து சிறப்பிக்கும் பெருவிழாவாக நடைபெறும் விருது விழா -2014, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான திருமதி ஸ்ரீதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி விழாவில் கனடா திரு லோகேந்திரலிங்கம் உரையை ஆற்றுவார்.
இவ்வருட கனடா விருது விழாவில் முதற் தடவையாக கனடாவின் கியுபெக் மாகாணத்தில் வெற்றியாளர்களாகத் திகழும் இருவருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten