புலிகள் 80 தமிழர்களை எரித்து கொன்றதாக ஆதாரங்களுடன் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம்-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளிபுரம் பிரதேசத்தில் இயங்கிவந்த எல்பா 5, எல்பா 2 என்று கூறப்படும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் மற்றும் இராணுவ கப்ரன் உள்ளிட்ட 80 தமிழர்களை புலிகள் இயக்கத்தினர் கொலை செய்து எரித்து விட்டதாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளிபுரம் பிரதேசத்தில் இயங்கிவந்த எல்பா 5, எல்பா 2 என்று கூறப்படும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் மற்றும் இராணுவ கப்ரன் உள்ளிட்ட 80 தமிழர்களை புலிகள் இயக்கத்தினர் கொலை செய்து எரித்து விட்டதாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு இவ்வாறு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்கிஸ்ஸை பொலிஸ் வலய பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் 2005.04.20 அன்று நள்ளிரவு 12 மணிக்கு கல்கிஸ்ஸை ஹோட்டலில் வைத்து புலிகள் இயக்கத்தினால் கடத்திச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
வெள்ளை வேனில் சிலாபம் நோக்கி கடத்திச் செல்லப்பட்ட ஜெயரட்ணம் படகு மூலம் மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின் விடத்தல் தீவிலிருந்து கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜெயரட்ணம் அடைக்கப்பட்டிருந்த சிறையில் இராணுவ கப்ரன் ஒருவரும் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட நபர்களும் புலிகள் இயக்கத்தில் தவறிழைத்த நபர்களும் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30 பேர் 2006 மே மாதம் கைகளுக்கு விலங்கிட்ட வண்ணம் லொறிகளில் எற்றப்பட்டு ஒட்டுசுட்டான் காட்டில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர்.
அத்தோடு 2006 ஜூலை மாதம் குறித்த சிறையிலிருந்த 50 பேர் லொறியிலும் றோசா பஸ்ஸிலும் அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இராணுவ கப்ரன் விஸ்வமடு தொட்டியடி பிரதேசத்தில் சிறை வைக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த கொலைகளுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலை தொடர்பிலும் கொலை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் இடம் தொடர்பிலும் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீதவான் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
(மேற்படி பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் என்பவர் புளொட் அமைப்புக்குள் ஊடுருவியிருந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மனோ என்பவரினால் கடத்தப்பட்டதும், மேற்படி மனோ எனும் புலி உறுப்பினரால் சுவிஸில் இருந்து 2003ம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்த புளொட் முக்கியஸ்தர் ஒருவர் வன்னிக்கு கடத்திச் செல்லும் நோக்கில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதும், ஆயினும் அச்சமயம் சுவிஸ் புளொட் முக்கியஸ்தருடன் ஒன்றாக இருந்த புளொட் முக்கியஸ்தரும், சிரேஸ்ட உறுப்பினருமான பாறுக் என்பவரினால் “இவர்களது நடவடிக்கை சந்தேகமாக இருப்பதினால், அவர்களுடன் செல்வதைத் தவிர்க்குமாறு” கூறித் தடுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.)
பொலிஸுக்கு பயந்து ஓடிய வாய்பேச முடியாத தமிழ் இளைஞன் ஆற்றில் விழுந்து மரணம்-
நுவரெலியா, பத்தனை தங்காப்பு (கிரெக்லி) தோட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 24 வயதுடைய ரட்ணகுமார் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா, பத்தனை தங்காப்பு (கிரெக்லி) தோட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 24 வயதுடைய ரட்ணகுமார் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாய்பேச முடியாத இவர் வீதியில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் பொலிஸ் வர பயந்து ஆற்றை கடந்து ஓட முயற்சித்துள்ளார்.
இதன்போதே ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இவரது சடலம் கொட்டக்கலை வைத்தியசாலையின் பிரத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
- See more at: http://www.athirady.com/tamil-news/news/257814.html#sthash.N1LMYIQN.Luz6OiRo.dpuf
Geen opmerkingen:
Een reactie posten