கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கைதுப்பாக்கி, 08 ரிவோல்வர்கள் என்பவற்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கொஸ்கொட, அம்பலாங்கொட, ஊரகஹா, ஹிக்கடுவ, பிட்டிகல, அவுங்கல போன்ற பிரதேசங்களில் நடந்த கொலைகளுடன் சந்தேக நபர்கள் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்தி இருவருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவங்களுடன் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். தென் பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்கள் கொலை செய்துள்ளமை தொடர்பிலும் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த பாதள உலக குழுவின் தென் பகுதியில் புதைத்து வைத்திருந்த வெற்று தோட்டக்கள் உள்ளிட்ட பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது கைதாகியுள்ள பாதாள உலகத் தலைவர், தாம் புலிகளிடம் இருந்துதான் ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில், இவர் எதனையும் கூறலாம். ஆனால் அவை அனைத்தும் உண்மையாகுமா ?
Geen opmerkingen:
Een reactie posten